“நான்கு காதல்களை கடந்துவிட்டேன். அந்த காதலை என்னால் இன்றும் மறக்க முடியவில்லை” என ‘மார்டன் லவ்’ பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘மாடர்ன் லவ்’ ஆந்தாலஜி வெப் தொடரின் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் - சென்னை’ தொடர் மே 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் பாரதிராஜா, “இந்தப்படம் எனக்கு புதிய அனுபவம். தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்திருக்கிறேன். இந்தபடம் வழக்கமான சினிமாவிலிருந்து தனித்து நிற்கிறது. தியாகராஜா வித்தியாசமான மனிதர். அவரிடமிருந்து நிறைய கற்றுகொள்ள வேண்டும்.
ஆளைப்பார்த்தால் ‘என்னையா மனுஷன்’ என நினைத்தேன். ஆரவாரமில்லாமல் அழகாக ஒரு காதல் கதை சொல்ல வேண்டும் என்பதை இவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். நான் காதல் செய்யவில்லை என்றால் கலைஞனாகியிருக்க முடியாது. எவன் ஒருவன் காதலை அழகாக சொல்கிறானோ அவன் தான் உண்மையான கலைஞன். நான் 84 வயதிலும் காதலிக்கிறேன் என்பதை தைரியமாகச் சொல்வேன். என்னைப் பொறுத்தவரை காதல் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. 9-வது படிக்கும்போது அப்படி எனக்கு ஒரு காதலி இருந்தாள். பின், சென்னை வந்து இத்தனை ஆண்டுகளில் இதுவரை நான்கு காதல்களைக் கடந்துவிட்டேன். ஆனால், அவர்களை(காதலிகளை) என்னால் இன்றும் மறக்க முடியவில்லை. எனக்கு நிழல் தந்த குடைகள் அவர்கள். இறப்பதற்குள் இன்னும் சிறந்த படத்தை இயக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
12 mins ago
சினிமா
20 mins ago
சினிமா
52 mins ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago