‘ஹிட்லிஸ்ட்’ படத்தில் வில்லனாகும் கவுதம் மேனன்

By செய்திப்பிரிவு

இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஹிட்லிஸ்ட்’ படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் வில்லனாக இணைந்துள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கும் படம் 'ஹிட்லிஸ்ட்'. இந்தப் படத்தில் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை 'தெனாலி', 'கூகுள் குட்டப்பா' படங்களுக்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமாரின் ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் காமெடி, ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் சித்தாரா, முனீஸ்காந்த், ஐஸ்வர்யா தத்தா, ஸ்மிருதி வெங்கட், பாலசரவணன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, கேஜிஎஃப் புகழ் கருடா ராமச்சந்திரா மற்றும் அனுபமா குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக இணைந்துள்ளார். சமீபத்தில் அவர் தொடர்பான சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE