ஜூன் மாதம் ஃபர்ஸ்ட் லுக்.. ஜூலையில் டீசர் - தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ அப்டேட்

By செய்திப்பிரிவு

தனுஷ் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஜூன் மாதம் வெளியாகும் எனவும், படத்தின் டீசர் ஜூலையில் வெளியாகும் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத் தொடர்ச்சி மலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யுப் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.

படத்தின் பூஜை கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தனுஷ் திரைத்துறையில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி அவர் நடித்து வரும் ‘கேப்டன் மில்லர்’ படம் சார்பில் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்தின் முதல் தோற்றம் வரும் ஜூன் மாதமும், ஜூலையில் டீசரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்