சென்னை: இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகளுமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சொகுசு காரின் சாவி தொலைந்து போய் விட்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது வீட்டில் உள்ள லாக்கரில் வைத்திருந்த தங்க, வைர நகைகளைக் காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்திருந்தார். மேலும், தனதுவீட்டு பணிப்பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள், கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் இருவரும் ஐஸ்வரியாவின் வீட்டிலிருந்து திட்டமிட்டு நகைகளை திருடியது தெரியவந்தது.
இந்த நிலையில், இன்று (மே 10) ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது சொகுசு காரின் சாவி தொலைந்து விட்டதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஏப்ரல் 23ஆம் தேதி கோபாலபுரத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது தனது காரின் மற்றொரு சாவி காணாமல் போனதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago