தமிழக அரசின் புதிய கேளிக்கை வரி விதிப்பை திரையுலகினர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதன் காரணமாக புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தமிழ் படங்களுக்கு 10 சதவீத கேளிக்கை வரியையும், மற்ற மொழிப் படங்களுக்கு 20 சதவீத கேளிக்கை வரியையும் தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று மாலை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவில் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் பேசியதாவது:
10 சதவீத கேளிக்கை வரி என்பது தமிழ் திரையுலகுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி. இன்றைக்கு இருக்கும் சூழலில் வட்டிக்கு பணம் வாங்கி, படங்களைத் தயாரித்து, விளம்பரப்படுத்தி திரையரங்குகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும் போது கூடுதல் வரியை அரசாங்கத்துக்கு செலுத்துவது முடியாத காரியம்.
இதனால் அக்டோபர் 6-ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகாது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைக்கவுள்ளோம். இந்த கேளிக்கை வரியை அரசு ரத்து செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இது தொடர்பாக முதல்வரை சந்திக்க கடிதம் கொடுக்கவுள்ளோம்.
இவ்வாறு விஷால் பேசினார்.
மற்ற மொழி படங்களுக்கு தமிழக அரசு விதித்துள்ள 20 சதவீத கேளிக்கை வரியால் வார்னர் பிரதர்ஸ் மற்றும் சோனி நிறுவனங்கள் தங்களுடைய புதிய படங்களை தமிழகத்தில் திரையிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளன. தயாரிப்பாளர் சங்கமும் அக்டோபர் 6-ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளதால் புதுப் படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் அபிராமி ராமநாதன் கூறியதாவது:
10 சதவீத கேளிக்கை வரியை நீக்கும் வரை புதுப் படங்களை வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானித்துள்ளது . எங்களைப் பொறுத்தவரை நாங்கள் திரையரங்குகளை மூடுவதாக இல்லை. தமிழக அரசை அணுகி 10 சதவீத கேளிக்கை வரியை விலக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கவுள்ளோம். இதற்கு முன் திரைப்படங்களுக்கு அரசு 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க இருந்தபோது முதல்வரிடம் இதுபற்றி பேசினோம். அதைத் தொடர்ந்து தற்போது 10 சதவீதமாக கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதையும் நீக்குமாறு முதல்வரிடம் கோருவோம். சென்னையைப் போலவே மற்ற மாவட்டங்களிலும் திரையரங்குகள் இயங்கும் என்று நம்புகிறோம். புதிய படங்கள் வெளியாகும் வரை இருக்கும் படங்களை வைத்து திரையரங்குகள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago