தமிழில் மீண்டும் மீரா ஜாஸ்மின் - நயன்தாராவின் ‘டெஸ்ட்’ படம் மூலம் ரீ-என்ட்ரி

By செய்திப்பிரிவு

நீண்ட இடைவெளிக்குப்பின் நடிகை மீரா ஜாஸ்மின் நயன்தாரா நடிக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

'தமிழ்ப் படம்', 'விக்ரம் வேதா', 'இறுதிச்சுற்று' மற்றும் தேசிய விருது பெற்ற 'மண்டேலா' உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்பாளரான YNOT ஸ்டுடியோஸ் எஸ்.சஷிகாந்த் இப்படத்தை இயக்குகிறார். தனது 23வது தயாரிப்பான 'டெஸ்ட்' மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல நட்சத்திரங்களான மாதவன், சித்தார்த், நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் சக்தி ஸ்ரீகோபாலான் இசையமைக்க உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘விஞ்ஞானி’ படத்தில் கடைசியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். அதன்பிறகு மலையாளத்தில் அவர் படங்கள் நடித்தாலும் 9 வருடமாக தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டவில்லை. தற்போது மீண்டும் ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் ரீ- என்டி கொடுப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE