சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை ஏ, பி, சி சென்டர் எனப் பிரிப்பார்கள். ‘குரங்கு பொம்மை’ படத்துக்கு இந்த அனைத்து வகை சென்டர்களிலும் கைதட்டல் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து ஏதோ ஒரு சாதனை செய்திருப்பதாக உணர் கிறேன்.. என்று மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கினார் விதார்த்.
வித்தியாசமான படங்களின் நாயகன் என்பதில் இருந்து கமர்ஷியல் நாயகனாக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா?
நமக்கென ஒரு இடத்தைப் பிடிக்க வித்தியாசமான படங்கள் தேவைப்படுகின்றன. அதற்கான படங்களாகத்தான் தேர்வு செய்து நடிக்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் மனதிலும் போய்ச் சேர இதுபோன்ற படங்கள் உதவியாக இருக்கும். கமர்ஷியல் படங்களிலும் உடன்பாடு இருக்கிறது. அதில் நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்லவில்லை. அதிலும்கூட எனக்கான தனித்தன்மையோடு செய்ய வேண்டும் என விரும்புகிறேன். நான் நடித்துள்ள ‘ஆயிரம் பொற்காசுகள்’ படம் வெளியாகும்போது கமர்ஷியல் நாயகன் அந்தஸ்து கிடைக்கும் என நினைக்கிறேன்.
‘மைனா’ முதல் ‘குரங்கு பொம்மை’ வரை ஒவ்வொரு படமும் உங்களுக்கு வித்தியாச மான களங்கள்தான். இதை நீங்களே உருவாக்கிக்கொண்டதா?
‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘குற்றமே தண்டனை’, ‘குரங்கு பொம்மை’ ஆகிய படங்களுக்குமே தயாரிப்பாளர் என்னைத் தேடி வரவில்லை. மூன்றுமே நான் உருவாக்கிய படங்கள். ‘குற்றமே தண்டனை’ என் தம்பி கள் தயாரித்தது. இப்படித் தான் தயாரிக்க வேண்டும் என உருவாக்கினோம். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தையும் நானே தயாரிப்பதாகத்தான் வேண்டியது. கால தாமதம் காரணமாக, அந்தக் கதையை ஈராஸ் நிறுவனத்துக்கு இயக்குநர் மணிகண்டன் அனுப்பிவைத்தார். ‘வித்தியாசமான கதையாக இருக்கிறது, தயாரிக்கிறோம்’ என்றார்கள். நானே நடிப்பதாகச் சொன்னேன். சம்பளமாக சிறுதொகையைக் கூறினர். அந்தப் படத்துக்காக ஒப்புக்கொண்டேன். அதேபோல, ‘குரங்கு பொம்மை’ கதையும் கேட்டவுடன் பிடித்துவிடவே, என் நண்பர்களையே தயாரிப்பாளர்களாக்கி உருவாக்கினோம். இந்த மூன்று படங்களின் கதையைக் கேட்டதும், அந்தக் கதைக்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் எனத் தோன்றியது.
குறைந்த சம்பளம் என்று தெரிந்தும் நடிக்கிறீர்கள். ஏன், பெரிதாக எதிர்பார்ப்பதில்லை?
சில கதைகள் ரொம்ப பிடித்துவிடும். ஆனால், எதிர்பார்க்கிற சம்பளம் கிடைக்காது. பிடித்துப் போன கதையை விடுவதற்கும் மனசு வராது. ‘பணம்தானே.. அடுத்த படத்தில் சம்பாதித்துக் கொள்ளலாம்’ என்ற முடிவுடன், ‘கொடுப்பதைக் கொடுங்கள்’ என்று, நடிக்க ஒப்புக்கொண்டு விடுகிறேன். எனக்கான ஒழுங் கான ஊதியத்தை இதுவரை வாங்கியதே இல்லை. என்னை வைத்து படம் தயாரித்த, தயாரிக்கிற, தயாரிக்கவுள்ள அனைவருக்கும் இது தெரியும். கூத்துப்பட்டறையில் மாதச் சம்பளத்துக்கு நடித்தவன்தானே நான். பணத்தை மட்டும் வைத்து என்ன செய்துவிட முடியும்? உண்மையில், எனக்கு பணத்தைவிட படம்தான் தேவைப்படுகிறது. ‘இந்தக் கதையில் நான் நடித்திருக்கக் கூடாதா’ என்று பலரும் ஏங்குகிறார்கள்.
அத்தகைய பாராட்டுக்கு முன்பு பணம் ஈடாகுமா? இந்த அங்கீகாரத்துக்குதானே நடிக்க வந்திருக்கிறோம். கோடிகளில் சம்பளம் வாங்குகிற சூழ்நிலையில்கூட, பிரமாதமான கதையோடு யாராவது வந்தால், சம்பளமே வாங்காமல்கூட நடிப்பேன்.
பாரதிராஜாவுடன் நடித்து, அவரது இயக்கத்திலும் நடிக்கிறீர்களே..
அவரை ஓர் இயக்குநராகத்தான் எல்லோருக்கும் தெரியும். அவர் முதன்முதலில் வந்ததே நடிக்கத்தான். சாதாரண பாமரனைக்கூட நாயகனாக்கி இருக்கிறார். அந்த நடிப்பு அவருக்குள் இருந்ததால் மட்டுமே, மற்றவர்களிடம் இருந்து அந்த நடிப்பை வாங்க முடிந்தது. அவரது நடிப்பைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். எனக்கு முதலில் அவரோடு நடிப்பதற்கும், தற்போது அவரது இயக்கத்தில் நடிப்பதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
என் மார்க்கெட் நிலவரத்துக்கு புதிய இயக்குநர்களோடு மட்டுமே படம் செய்ய முடிகிறது. அதனை ‘குரங்கு பொம்மை’ கொஞ்சம் மாற்றியிருக்கிறது. தற்போது ‘வண்டி’, ‘ஆயிரம் பொற்காசுகள்’, ‘கொடிவீரன்’ ஆகிய படங்களில் நடிக்கிறேன். ‘கொடிவீரன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரம். என்னைச் சுற்றித்தான் அந்தக் கதை நிகழும். இன்னொரு படத்தில் கவுரவத் தோற்றம்.
அஜித், விஜய் ஆகியோருடனும் நடித்திருக்கிறீர்கள். உங்கள் படங்களைப் பார்த்துவிட்டு பாராட்டி னார்களா?
அஜித் சார் ‘குற்றமே தண்டனை’ பார்த்துவிட்டு, ‘‘பிரமாதமான படம்’’ என்று பாராட்டினார்.
‘‘என்னுடன் நடித்த பையன்தானே, அருமையாக நடிக்கிறான். வீட்டுக்கு கூட்டிட்டு வா’’ என்று மாறன் என்பவரிடம் விஜய் சார் கூறியிருக்கிறார். படப்பிடிப்பில் இருந்ததால் போக முடியவில்லை. கண்டிப்பாக ஒருநாள் அவரை சந்திப்பேன்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago