தந்தைக்காக மகன் பாடிய கடைசி பாட்டு - நடிகர் மனோபாலாவின் இறுதி தருணங்கள்

By செய்திப்பிரிவு

தமிழ் சினிமா இயக்குநரும், நடிகருமான மனோபாலா சென்னையில் சில தினங்கள் முன் (மே 3) காலமானார்.

கடந்த ஜனவரி மாதம் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அதற்காக ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்ற அவர், கடந்த சில நாட்களாக தனது வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி திடீரென மரணமடைந்தார்.

300-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர்; 24 படங்களை இயக்கியவர்; தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞரான மனோபாலாவின் கடைசி நிமிடங்களை அவரது யூடியூப் பக்கத்தில் அவரின் மகன் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மனோபாலாவின் நிலை பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது. பலரை சிரிக்க வைத்த மனோபாலா நினைவிழந்த நிலையில் இருக்க, அவரை சந்தோஷப்படுத்த அவரின் மனைவி, மகன் மற்றும் உதவியாளர் முற்படுகின்றனர். பின்னர், மனோபாலாவுக்காக அவரின் மகன் ஹரிஷ் பாடல் பாடி அசத்துகிறார். இந்த வீடியோ இப்போது கவனம் பெற்று வருகிறது.

வீடியோவைக் காண...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்