ஹிப்ஹாப் ஆதியின் ‘வீரன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிக்கும் ‘வீரன்’ படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

'சிவகுமாரின் சபதம்' 'அன்பறிவு' படங்களைத் தொடர்ந்து 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி நடிக்கும் புதிய படம் 'வீரன்'. ‘மரகதநாணயம்’ இயக்குநர் சரவணன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆதிரா ராஜ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். 'ஹிப் ஹாப்' ஆதி படத்திற்கு இசையமைக்க, தீபக் டி.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஃபேன்டஸி காமெடி, ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இப்படம் வரும் ஜூன் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE