சமந்தா அனைத்து மகிழ்ச்சிக்கும் தகுதியானவர் - நாக சைதன்யா

By செய்திப்பிரிவு

நடிகர் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள படம், ‘கஸ்டடி’. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படம் வரும் 12-ம் தேதி வெளியாகிறது.

ஹைதராபாத்தில் நடந்த இந்தப் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட நாக சைதன்யா, சமந்தாவுடனான விவாகரத்து பற்றி கூறியிருப்பதாவது: நாங்கள் பிரிந்து 2 வருடம் ஆகிறது. முறைப்படி விவாகரத்து செய்து ஒரு வருடம் ஆகிவிட்டது. நாங்கள் அவரவர் வாழ்க்கைக்கு நகர்ந்துவிட்டோம். எங்களின் அந்த திருமண வாழ்க்கை மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

சமந்தா இனிமையானவர். அவர் அனைத்து மகிழ்ச்சிக்கும் தகுதியானவர். சமூக வலைதளங்களில் வெளிவந்த வதந்திதான் பிரச்சினைக்கு காரணம். அதை முதலில் கண்டுகொள்ளவில்லை. பிறகு அது கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றது. ஊடகங்கள் வதந்திகளைப் பரப்பும்போதுதான் அது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அது, மக்கள் பார்வையில் பரஸ்பர மரியாதையைப் பறிக்கிறது. அதைத்தான் மோசமாக உணர்கிறேன். இவ்வாறு நாக சைதன்யா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்