விக்ரம் வேதா ரீமேக் சர்ச்சை: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

By ஸ்கிரீனன்

'விக்ரம் வேதா' ரீமேக் உரிமையை யாருக்கும் விற்கவில்லை என்று தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

தமிழில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விக்ரம் வேதா'. இதன் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பெரும் போட்டி நிலவி வந்தது.

இப்படத்தின் இந்தி ரீமேக்கில் ஷாருக்கான் நடிப்பது உறுதியாகியுள்ளது என்று அவருடைய தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் 'விக்ரம் வேதா' ரீமேக் உரிமையைக் கைப்பற்ற தயாரிப்பாளர் சசிகாந்த்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்தி திரையுலகில் செய்திகள் வெளியானது.

இதற்கு 'விக்ரம் வேதா' தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் "'விக்ரம் வேதா' படத்தின் எந்த மொழியின் ரீமேக் உரிமையையும் யாருக்கும் விற்கவில்லை. நாங்களே தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். நன்றி" என்று தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் தெளிவுப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஷாருக்கான் நடிக்கவிருப்பதாக வெளியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலெட்சுமி சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சாம் இசையமைத்த இப்படத்துக்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்தார். சஷிகாந்த் தயாரித்திருந்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்