யுவன் விலகல்: கொம்பனுக்கு இசையமைக்கிறார் ஜி.வி. பிரகாஷ்

By செய்திப்பிரிவு

நடிகர் கார்த்தியின் அடுத்த படமான கொம்பன் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். முன்னாதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த யுவன் சங்கர் ராஜா விலகியுள்ளதால், ஜி.வி பிரகாஷ் அந்த இடத்தை நிரப்பவுள்ளார்.

பருத்தி வீரனுக்கு அடுத்து கார்த்தி நடிக்கும் கிராமப் பின்னணியுள்ள திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜி.வி பிரகாஷ் இசையில், ஏற்கனவே, ஆயிரத்தில் ஒருவன், சகுனி ஆகிய திரைப்படங்களில் கார்த்தி நடித்துள்ளார். இந்த இணையின் மூன்றாவது திரைப்படம் கொம்பன்.

குட்டிப்புலி இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி கொம்பன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். உடன் ராஜ்கிரண் முக்கியப் பாத்திரத்தில் தோன்றுகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE