கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே21’ படத்தின் பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே21’ படத்துக்கான பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் கமல்ஹாசன் கலந்துகொண்டு க்ளாப் போர்டு அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

‘பிரின்ஸ்’ படத்தின் தோல்விக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக ‘மாவீரன்’ படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. அதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் ‘அயலான்’ இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது. இந்தப் படங்களைத் தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்தியேகன் நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ‘எஸ்கே21’ என அழைக்கப்படும் இப்படத்தில் சாய் பல்லவியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. பட பூஜையில் தயாரிப்பாளரான கமல்ஹாசன் கலந்துகொண்டு க்ளாப் போர்டு அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாகவும், ராணுவம் தொடர்பான காட்சிகளை படமாக்க படக்குழு விரைவில் காஷ்மீர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, சிறப்பு பயிற்சிகளையும் சிவகார்த்திகேயன் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்