தமிழக அரசு மீண்டும் கேளிக்கை வரி விதிப்பு: தமிழ்த் திரையுலகினர் அதிர்ச்சி

By ஸ்கிரீனன்

தமிழ் படங்களுக்கு 10%, மற்ற மொழி படங்களுக்கு 20% தமிழக அரசு கேளிக்கை வரி விதிருப்பதால், தமிழ்த் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

சினிமா திரையரங்குகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் உள்ளாட்சி சார்பில் 30 சதவீத கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இதனால், திரைத்துறை பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறி திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் சுமார் 1,000 திரையரங்குகளில் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து முதல்வர் கே.பழனிசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், வீரமணி, வேலுமணி, கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்களோடு திரைத்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பேச்சுவார்த்தையில் முடிவில் 30% கேளிக்கை வரியை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவெடுக்கப்பட்டது.

தற்போது, தமிழக அரசு தமிழ் மொழி படங்களுக்கு 10%, மற்ற மொழி படங்களுக்கு 20% கேளிக்கை வரி விதித்திருக்கிறது. இதனால் தமிழ் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.

மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் ஒரே வரிவிதிப்பு முறையைக் கொண்டுவரவே தமிழ் திரையுலகினர் முயற்சி மேற்கொண்டனர். தற்போது தமிழக அரசின் அறிவிப்பால் மீண்டும் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்