ஜி.வி.பிரகாஷ் குமார்- ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடித்திருக்கும் ‘டியர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
'செத்தும் ஆயிரம் பொன்' எனும் திரைப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘டியர்’. இப்படத்தில் முதன்முறையாக ஜி. வி. பிரகாஷ் குமார்- நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.
ருக்கேஷ் படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை பிரகதீஷ் கவனித்திருக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் பாடலொன்றை ராப் பாடகரும், பாடலாசிரியருமான அறிவு எழுதி, பாடியிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
» “எனது 25 வருட திரைப்பயணத்தில் இது பெரிய பின்னடைவு” - ‘சாகுந்தலம்’ தோல்வி குறித்து தில் ராஜு
» ஆக.10-ல் ரஜினியின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு
இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ‘தி ஸ்டோரி’ என்பதில் ‘ஸ்டோரி அடிக்கப்பட்டு ‘ஸ்நோரிங்’ பிகின்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. போஸ்டரும் அதையே வலியுறுத்துகிறது. இதன் மூலம் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இருக்கும் குறட்டை பழக்கை ஜி.வி.பிரகாஷ்குமார் எப்படி சமாளிக்கிறார் என்பதாக படம் இருக்கும் என தெரிகிறது.
இதனிடையே, மே 12-ம் தேதி மணிகண்டன் நடிப்பில் திரைக்கு வர இருக்கும் ‘குட் நைட்’ படமும் கூட குறட்டை பிரச்சினையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப்படத்தில் நாயகனின் குறட்டை சப்தத்தை நாயகி எதிர்கொள்வார். இதில் நாயகியின் குறட்டை சப்தத்தை நாயகன் எதிர்கொள்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
35 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago