“அருமை நண்பர்...” - மனோபாலா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

By செய்திப்பிரிவு

நடிகரும், இயக்குநருமான மனோபாலா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா இயக்குநரும், நடிகருமான மனோபாலா சென்னையில் இன்று (மே 3) காலமானார். அவருக்கு வயது 69. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினையால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மனோபாலா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மனோபாலா உயிரிழந்தார்.

மனோபாலாவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்தை வைத்து ‘ஊர்க்காவலன்’ என்ற படத்தை மனோபாலா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE