‘தங்கலான்’ படத்துக்கான ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததாக விக்ரமின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
‘பொன்னியின் செல்வன் 2’ படத்துக்குப்பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் படம் ‘தங்கலான்’. ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்திற்கு பிறகு இந்தப்படத்தை இயக்குகிறார். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் ‘கேஜிஎஃப்’ பகுதிக்கான படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தாண்டு இறுதியில் படம் வெளியாக உள்ளது.
இந்த் நிலையில் ‘தங்கலான்’ படத்துக்கான ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்ததாக விக்ரமின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
» சிவகார்த்திகேயன் படத்துக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார்
» AI தொழில்நுட்பத்துக்கு எதிர்ப்பு: போராட்டத்தில் குதித்த ஹாலிவுட் சினிமா எழுத்தாளர்கள்
‘பொன்னியின் செல்வன் 2’ வெற்றியை முன்னிட்டு உலகம் முழுவதிலிருந்தும் விக்ரமுக்கு வரும் வாழ்த்து மற்றும் பாராட்டுகளுக்கு நன்றி. ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தினால் விக்ரமுக்கு விலா எலும்பு முறிந்துள்ளது. இதன் காரணம் சில நாட்களுக்கு அவரால் ‘தங்கலான்’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இயலாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் விக்ரம் விரைவில் குணமடைய சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago