குறட்டையும் சிக்கல்களும் - மணிகண்டனின் ‘குட் நைட்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் நைட்’ பட ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘காலா’, ‘ஜெய்பீம்’ படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்த மணிகண்டன் அடுத்ததாக நடித்துள்ள படம் ‘குட் நைட்’. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில், ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - தூங்கும்போது குறட்டைவிடும் பழக்கம் கொண்ட நாயகன் தன் வாழ்நாளில் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. இந்த கதைக்களத்தை ஜாலியான ஃபேமிலி ட்ராமாவாக இயக்குநர் கொடுக்க முயன்றிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. மேலும், குறட்டையை நிறுத்த நாயகன் செய்யும் செயல்களும், காதல் வாழ்க்கைக்கு குறட்டை பெரும் பிரச்சினையாக இருப்பதையும் காமெடியாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.

‘குறட்டையும் பிரச்சினைகளும்’ என்ற சிறிய ஒன்லைனைக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படம், அது சார்ந்து பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்பையும் பதிவு செய்திருப்பது கவனம் பெறுகிறது. ஷான் ரோல்டனின் பின்னணி குரலும் இசையும் ட்ரெய்லரை ரசிக்க வைக்கிறது. படம் வரும் மே 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்