விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்

By செய்திப்பிரிவு

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2014ஆம் ஆண்டு வெளியான ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே கூட்டணி ‘ராட்சசன்’ படத்திலும் மீண்டும் இணைந்தது. சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவான இப்படம் தமிழின் முக்கிய படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது. இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை என இப்படத்தின் தொழில்நுட்ப ரீதியான விஷயங்களும் பெரிதும் பேசப்பட்டன. இந்த சூழலில், ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதனை விஷ்ணு விஷாலும் சமீபத்தில் உறுதி செய்தார்.

இப்படம் காதல் கதையை அடிப்படையாகக் கொண்டதாகவும், இதில் ஃபேண்டசி மற்றும் எமோஷனல் அம்சங்களும் இடம்பெறும் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் அதிதி ஷங்கர் கவனம் செலுத்தி வருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE