‘பொன்னியின் செல்வன் 2’ பார்க்க வந்த கார்த்தி - குவிந்த ரசிகர்கள்; உடைந்த திரையரங்கு கண்ணாடி

By செய்திப்பிரிவு

நடிகர் கார்த்தி ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தைப்பார்க்க காசி திரையரங்கிற்கு வந்தார். அப்போது ரசிகர்கள் கூட்டம் முண்டியடித்துக்கொண்டு வந்ததால் திரையரங்கின் முகப்பு கண்ணாடி உடைந்தது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன் 2’ படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. படத்தின் முதல் காட்சி தமிழகம் முழுவதும் காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. சென்னை காசி திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் 9 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த திரைப்படத்தை ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர். படத்தைக்காண நடிகர் கார்த்தி காசி திரையரங்குக்கு வந்திருந்தார்.

பின்னர் திரையரங்கிலிருந்து நடிகர் கார்த்தி வெளியே வந்தபோது, அவரை ரசிகர்கள், பத்திரிகைகள் சூழ்ந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கூட்டத்தில் திரையரங்கின் முகப்பு கண்ணாடி உடைந்து சிதறியது. கண்ணாடி உடைந்ததில் அங்கிருந்த இரண்டு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டநிலையில், கார்த்தியின் பாதுகாவலர்கள் உடனடியாக அவரை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

32 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

23 hours ago

மேலும்