புதுப் புது கெட்டப்கள், கலர்ஃபுல் காட்சிகள், டைம் ட்ராவல்... - விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டைம் ட்ராவலை மையப்படுத்தி படம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, ‘பகீரா’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ‘மார்க் ஆண்டனி’. படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனீல், செல்வராகவன், ரிது வர்மா, அபிநயா, கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தை மினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘மார்க் ஆண்டனி’ படக்குழு இன்று காலை விஜய்யை சந்தித்திருந்தது குறிப்பிடத்தகது.

டீசர் எப்படி? - பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் படங்களை இயக்கிக்கொண்டிருந்த ஆதிக் ரவிச்சந்திரன் இம்முறை டைம் ட்ராவலை கையிலெடுத்திருக்கிறார். விஷால், எஸ்.ஜே.சூர்யாவுக்கான புதுப் புது கெட்டப்களும் 90’ஸ் உடையும் தாடியும் கவனம் பெறுகிறது. பின்னணியில் ஜி.வி.பிரகாஷின் ரெட்ரோ இசை 2.21 நிமிடங்கள் டீசருக்கு ‘பூஸ்ட்’. ‘நானே எல்லாத்தையும் மாத்தி மறந்து மாறி வந்திருக்கேன்’ என எஸ்.ஜே.சூர்யா பேசும் வசனம் ஈர்க்கிறது. கெட்டப்கள், கலர்ஃபுல் விஷுவல்ஸ், பின்னணி இசை ரசிக்க வைத்தாலும், டைம் ட்ராவல் கதை எந்த அளவுக்கு புதுமை சேர்க்கும் என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்க வேண்டும். படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. டீசர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்