ஸ்கூல்... காலேஜ்... சிங்கிள்! - அசோக் செல்வனின் ‘சபா நாயகன்’ டீசர் எப்படி?

By செய்திப்பிரிவு

அசோக் செல்வன் நடித்துள்ள ‘சபா நாயகன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் ‘சபா நாயகன்’. மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன், சாந்தினி சௌத்ரி, மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, அருண் குமார் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். லியோ ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அசோக் செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ படத்திற்கு பிறகு இப்படம் திரையில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டீசர் எப்படி? - பள்ளிமாணவன், கல்லூரி இளைஞன் என வெவ்வேறு தோற்றத்தில் வருகிறார் அசோக் செல்வன். வழக்கமான பள்ளி, கல்லூரி, காதல் கதையை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியுள்ளதை டீசர் உணர்த்துகிறது. ‘சிங்கிள்’ பசங்க என்பதையும், காதலா? நட்பா? என்பதையும் வைத்து நகரும் காட்சிகள் எந்த புதுமையையும் சேர்க்கவில்லை. வழக்கமான டீசர் கதைக்குள் என்னென்ன சுவாரஸ்யங்களை ஒளித்துவைத்துள்ளது என்பதை படம் வெளியானால் புரிந்துகொள்ள முடியும். படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. டீசர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE