திரைப்பட ஆய்வாளர் ராண்டார் கை காலமானார்

By செய்திப்பிரிவு

பிரபல திரைப்பட ஆய்வாளர் ராண்டார் கை, வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. மாதபூஷி ரங்கதுரை என்ற இயற்பெயர் கொண்ட ராண்டார் கை, வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர். எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால், அதில் கவனம் செலுத்திய அவர், பல்வேறு பத்திரிகைகளில் பத்தி எழுதினார். திரைப்படங்கள் குறித்து, 1991-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட ‘தமிழ் சினிமா வரலாறு’ உட்பட பல நூல்களை எழுதியுள்ளார்.

ஆவண மற்றும் திரைப்படங்களுக்கும், கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ‘டேல்ஸ் ஆஃப் தி காம சூத்ரா: பெர்ஃப்யூம்ட் கார்டன்’ என்ற ஆங்கில திரைப்படத்தை 1999-ல் தயாரித்துள்ளார். இது ‘பிரம்மச்சாரி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. சென்னையில் வசித்து வந்த ராண்டார் கை, நேற்று முன்தினம் இரவு காலமானார். அவர் மறைவுக்குத் திரை பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

34 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்