மெர்சல் அப்டேட்: 135 கோடி பட்ஜெட், பின்னணி இசைக்கோர்ப்பு தொடக்கம்

By ஸ்கிரீனன்

135 கோடி பொருட்செலவில் 'மெர்சல்' உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளைத் துவங்கியுள்ளார்.

பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, 'மெர்சல்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஐடி கம்பெனியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதோடு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது.

மேலும், எடிட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளைத் துவங்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அதோடு இப்படத்தின் டீஸர் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளார்.

இதன் அமெரிக்க வெளியீட்டு உரிமையை ATMUS மற்றும் US Tamil LLC இணைந்து கைப்பற்றியுள்ளது. அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் 135 கோடி பொருட்செலவில் 'மெர்சல்' உருவாகியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்கள். தீபாவளி வெளியீடு உறுதி என்று தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள்.

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மெர்சல்' படத்தை அட்லீ இயக்கியுள்ளார். விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன், வடிவேலு, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விஜய்யின் முந்தைய படங்களை விட அதிகப் பொருட்செலவில் உருவாகியுள்ளதால், இதற்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

24 mins ago

சினிமா

44 mins ago

சினிமா

50 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்