“தனுஷுடன் நான் இணையும் படம்தான் என் கரியரில் மிகப் பெரிய பாய்ச்சல்” - மாரி செல்வராஜ்

By செய்திப்பிரிவு

“தனுஷுடன் நான் இணையும் படம் என் கரியரில் மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும். வரலாற்றுப் படம் அது. அதனால்தான் இத்தனை நாள் காத்திருக்கிறோம். இந்தப் படம் இருவரிம் கரியரிலும் முக்கியமான படமாக இருக்கும்” என்று இயக்குர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், “தனுஷுடன் இணைந்து படம் பண்ணுவது முன்பே திட்டமிட்ட ஒன்றுதான். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அதை உடனே தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தை வொண்டர்பார் நிறுவனமே தயாரிப்பது சந்தோஷம். அது நானே எதிர்பார்க்காத அப்டேட் இது.

தற்போது அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து படத்தை தொடங்க இருக்கிறேன். அதன்பிறகு தனுஷ் படத்தை இயக்குகிறேன். ‘மாமன்னன்’ படத்தின் ரிலீஸ் தேதி இந்த வாரம் வெளியிடப்படும். தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இது இருக்கும். பிரமாண்டமான படமாக இருக்கும். இன்றைக்கான அரசியலை பேசும் முக்கியமான படமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ‘இப்படி ஒரு படம் பண்ண முடியுமா?’ என நான் விருப்பப்பட்ட ஆசைபட்ட ஒரு படம் ‘மாமன்னன்’. இதில் வழக்கமான வடிவேலுவை நீங்கள் இப்படத்தில் பார்க்க முடியாது. முற்றிலும் வேறுபட்ட ஒரு வடிவேலை படத்தில் பார்ப்பீர்கள்.

தனுஷுடன் நான் இணையும் படம் என் கரியரில் மிகப் பெரிய பாய்ச்சலாக இருக்கும். வரலாற்று படம் அது. அதனால்தான் இத்தனை நாள் காத்திருக்கிறோம். இந்தப் படம் இருவரின் கரியரிலும் முக்கியமான படமாக இருக்கும்.

என்னிடம் இருக்கும் கதைகளை இயக்குவதற்கே 10 படங்கள் தேவை. நாவலைத் தொட வேண்டும் என்றால், அதற்கு முன் நான் என்னிடம் இருக்கும் கதைகளை வைத்து 10 படங்களை இயக்க வேண்டும். அப்படியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறோம். நாவலைப் நாடி போக வேண்டிய தேவை இப்போது இல்லை” என்றார்.

துருவ் விக்ரம் படம் குறித்து பேசுகையில், “மடத்தி கணேசன் என்கிற அர்ஜுனா விருது வென்ற இந்திய வீரரின் பயோபிக்ககாக இது இருக்கும். அவர் எனது உறவினர். நெருக்கமான ஒருவர். அவர் படத்தை எடுக்க வேண்டும் என நீண்ட நாள் ஆசை. அடுத்தப் படம் அதுதான். ‘தங்கலான்’ தமிழ் சினிமாவின் மைல்க்கல்லாக இருக்கும். பா.ரஞ்சித்தும், விக்ரமும் வெறித்தனமாக உழைத்திருக்கிறார்கள்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE