காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘அவள் பெயர் ரஜ்னி’ படத்தின் டீசர் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது.
‘விக்ரம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ படங்களுக்குப்பிறகு காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘அவள் பெயர் ரஜ்னி’. நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் படத்தை இயக்கியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், துப்பறியும் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.சென்னை, பொள்ளாச்சி, கொச்சின் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ட்ரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago