“ஒவ்வொருவருக்கும் ஒரு ரிங்டோன்” - ‘பொன்னியின் செல்வன் 2’ மேடையில் கார்த்தி ருசிகரம்

By செய்திப்பிரிவு

‘பொன்னியின் செல்வன்-1’ படத்தின் முதல் பகுதியில் தனக்கும் த்ரிஷாவுக்கும் இருந்த ஒரு காதல் காட்சியைப் போலவே, இரண்டாம் பாகத்திலும் இருக்கிறது என்று ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தின் ஆன்ந்த்ம் வெளியிட்டு விழாவில் நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விக்ரம், “இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கும் என்று நினைக்கவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நிகழ்ச்சியை இங்கு நடத்த அனுமதி வழங்கிய அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நன்றி. எனது நடிப்பை ஏற்று முதல் பாகத்தில் பாராட்டியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் பாதியில் இந்த படத்தைப் பற்றி அதிகம் பேசினேன். இங்குள்ள பார்வையாளர்களைப் போலவே இந்த நிகழ்வையும் ரசிக்க வந்துள்ளேன். இந்த படத்திற்காக 'பிஎஸ்கீதம்' பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார். அவர் எப்போதுமே பாஸ்தான்” என்றார். இதன் பின்பு மாணவர்களுக்காக பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ஒரு பாடலை விக்ரம் பாடினார். ராகத்தில் தவறு ஏதும் இருந்தால் மன்னிட்டுவிடுங்கள் ரஹ்மான் என கூறிவிட்டு பாட.. மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.

நடிகர் கார்த்தி பேசும்போது, “என்ன மாமா சௌக்கியமா? ( மாணவர்களை பார்த்து ) இவ்வளவு நேரம் இங்கு காத்திருந்ததற்கு மிக்க நன்றி. அதற்காக உங்களுக்கு ஒரு ஐ லவ் யூ. இன்ஜினியரிங் படிக்க வேண்டுமென்று ஒரு பையனுக்கு தலையில் எழுதி இருந்தால் ஒன்று IIT போகணும், இல்லையென்றால் அண்ணா யுனிவர்சிட்டி வரணும். நானும் இன்ஜினியர் தான். நான் ஆசைப்பட்டேனோ இல்லையோ? எங்க அம்மா அப்பா ஆசைப்பட்டார்கள். அண்ணா யூனிவர்சிட்டி உள்ள போக வேண்டுமென்று முயற்சி செய்தேன். ஆனால், கடைசிவரை இடம் கிடைக்கவே இல்லை. இங்கு வந்து ரன்னிங் போனதுதான் மிச்சம்.

நான் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக இதே மைதானத்தை அதிக சுற்றுகள் ஓடிய நினைவுகள் எனக்கு நன்றாகவே இருக்கிறது. வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை பற்றி விஜய் அண்ணன் ஒரு மேடையில், எது உனக்கு ரொம்ப வேண்டுமென்று தவிக்குறோமோ அது உனக்கு கிடைத்துவிடும் என்று கூறி இருப்பார். பள்ளிக்கூடம் படித்தது ஆண்களுடன். அதன் பிறகு கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பு. அதிலும் ஒரு பெண்கூட உடன் படிக்கவில்லை. எப்போது காதல் செய்வோம் என்று ஏங்கியதற்கு வந்தியத்தேவன் போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைத்தது. உலக அழகிக்கே லைன் போடுகிறோம், மிஸ் சென்னைக்கு லைன் போடுகிறோம், மீன் பிடிக்கும் பெண்ணிற்கு லைன் போடுகிறோம் யாரையும் விட்டு வைக்கவில்லை. இவ்வளவு நாள் தவித்ததற்கு இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தது ரொம்ப சந்தோசம். மணி சாருக்கு நன்றி. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த கூட்டத்தைப் பார்க்க மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அதே அதிர்வைக் கொடுத்த மாணவர்களுக்கு நன்றி. CSK போட்டியில் இருப்பது போல இங்கு கூட்டம் இருப்பதில் மகிழ்ச்சி.

நானும் ஜெயம் ரவியும் நெருங்கிய நண்பர்கள். அவருடன் நான் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வேன். படப்பிடிப்பு தளத்தில் விக்ரம் எப்போதும் சுறுசுறுப்பாக செயல்படுவார். அவருடைய ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்கே இருக்கும் பொன்னியின் செல்வன் குழுவில் உள்ளவர்கள் எனக்கு போன் செய்தால் என்ன ரிங் டோன் வைத்திருப்பீங்கன்னு கேட்டாங்க.

ஜெயம் ரவிக்கு என்னுடைய போன் ரிங்டோன், டண்டணக்கா.. பாடல், விக்ரம் சார்க்கு ஒ...போடு.. பாடல், திரிஷாக்கு காதலே காதலே தனிப்பெருந்துணையே... பாடல் மற்றும் உலக அழகியே.. பாடலும் பொருந்தும், ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு நிலா அது வானத்து மேலே.. பாடல், ஐஸ்வர்யாராய் அவர்களுக்கு அன்பே அன்பே என்னை கொல்லாதே பாடல்.., இசைப்புயல் ரஹ்மானுக்கு பாம்பே படத்தின் பின்னணி இசை தான் இருக்கும். ( அந்த ராகத்தை பாடி காட்டினார் ). அந்த பின்னணி இசையைக் கேட்டாலே ல்வ் பண்ணாம இருக்க முடியாது. ஜெயராம்... அவர் எப்போதுமே இம்சை... படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்'' என்று கலாய்த்தார்.

மேலும், ''நான் குந்தவையை குன்னு என்று தான் மொபைலில் வைத்திருக்கிறேன். (கார்த்தி மேடையிலிருந்தே த்ரிஷாவுக்கு கால் செய்து, நான் படத்தில் நீங்கள் சொல்வதைத் தான் செய்வேன். ஆனால், இங்கு நான் சொல்வதை செய்ய வேண்டும் என்றார். த்ரிஷாவும் சொல்லுங்கள் என்றார். மேலே வாங்க என்று அழைத்தார். த்ரிஷாவும் மேடைக்கு வந்தார்). முதல் பகுதியில் எனக்கும் த்ரிஷாவுக்கும் ஒரு காதல் காட்சி இருக்கும். சூப்பராக இருக்கும். அதுபோலவே, இந்த பாகத்திலும் இருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

மேலும்