சென்னையில் சண்டக்கோழி 2 படப்பிடிப்பு தொடக்கம்

By ஸ்கிரீனன்

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'சண்டக்கோழி 2' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட அரங்குகளில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

'சண்டக்கோழி 2' படத்துக்காக சென்னையிலுள்ள பின்னி மில்லில் பிரம்மாண்டமான மதுரை திருவிழா போன்ற அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்பணிகள் முடிவடையவே, இன்று (செப்டம்பர் 20) முதல் அங்கு படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

முதலில் படத்துக்கான பூஜை போடப்பட்டது. இதில் இயக்குநர் லிங்குசாமி, ராஜ்கிரண் மற்றும் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றார்கள். அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

லிங்குசாமி இயக்கி வரும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். சக்தி ஒளிப்பதிவு செய்துவரும் இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் தான் சுமார் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளை மேற்கொண்டு பொங்கலுக்கு வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்