விஜய்யின் ‘லியோ’ படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ்

By செய்திப்பிரிவு

விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

‘வாரிசு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி 2-ம் தேதி துவங்கியது. இந்தப் படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், நடன இயக்குநர் சாண்டி, நடிகை ப்ரியா ஆனந்த், நடிகர் அர்ஜுன், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கான இசையை அனிருத் அமைக்கிறார். இப்படத்திற்கான காஷ்மீர் ஷெட்யூல் அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னையில் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஜோஜூ ஜார்ஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் சென்னையில் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஜோஜூ ஜார்ஜை பொறுத்தவரை அவர் தமிழில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘பஃபூன்’ ஆகிய படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்