சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படம் திரையில் வெளிவந்து ஓராண்டு நிறைவாகி உள்ளது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ‘வீர ராகவன்’ என்ற பெயரில் ‘ரா’ ஏஜெண்டாக விஜய் நடித்திருந்தார்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் வெளிவந்திருந்தது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், சதீஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசை அமைத்திருந்தார். சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவானது. மால் ஒன்றில் இருக்கும் மக்களை பயங்கரவாதிகள் பிணை வைத்திருப்பார்கள். மக்களில் ஒருவராக நடிகர் விஜய் இருப்பார். மக்களை அவரை எப்படி காத்தார் என்பதுதான் கதை.
இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘அரபிக் குத்து’ பாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. அண்மையில் விஜய்யின் ‘வீர ராகவன்’ பாத்திரத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்திருந்தனர். தற்போது ‘#1YearOfBeast’ என ரசிகர்கள் இந்தப் படம் குறித்த தங்களது பதிவுகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
தற்போது விஜய் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். நெல்சன், ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago