'மகளிர் மட்டும்' டீஸரை விளம்பரப்படுத்தும் விதத்திற்கு சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
பிரம்மா இயக்கத்தில் வெளியாகி, தேசிய விருதை வென்ற திரைப்படம் 'குற்றம் கடிதல்'. அப்படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் உருவாகும் படத்தை இயக்கி வந்தார்.
முழுக்க பெண்கள் பிரச்சினைகளை அலசும் படமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் பிரம்மா. சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கிரிஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறார்கள். ஜோதிகாவோடு லிவிங்ஸ்டன், நாசர், ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 'பெண்கள் தான் ஆண்களுக்கு தோசை சுட்டுக் கொடுக்கிறோம். ஆண்கள் நமக்கு ஒருநாளாவது தோசை சுட்டுக் கொடுத்துள்ளார்களா?' என்ற அடிப்படையில் அமைந்துள்ள டீஸர் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்த டீஸரை விளம்பரப்படுத்தும் நோக்கில் #MMDosaWithLove என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி, அதில் உங்களுடைய அம்மா, மனைவி உள்ளிட்டவர்களுக்கு தோசை சுட்டுக் கொடுத்து புகைப்படங்களை பதிவிடலாம் என்று அறிவித்தது படக்குழு. மேலும், நீங்கள் வேறொருவருக்குக் கூட சவால் விடலாம் என்று தெரிவித்தது.
#MMDosaWithLove என்ற ஹேஷ்டேக்கிற்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் சூர்யா, அசோக் செல்வன், ஜிப்ரான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் தோசை சுட்டுக் கொடுத்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஒரு படத்தை பிரபலப்படுத்த இது ஒரு நல்ல முயற்சி என்று பலரும் தங்களுடைய சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago