நல்லதும், கெட்டதும் கலந்ததுதான் முழுமையான வாழ்க்கை என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா நேற்று சென்னையிலுள்ள அவரது ஸ்டுடியோவில் தன் இசைக் குழுவினரோடு நவராத்திரி, ஆயுதபூஜையை கொண்டாடினார். அப்போது அவர் பேஸ்புக்கில் கலந்துரையாடல் நடந்தது.
அதில் இளையராஜா பேசியதாவது :-
மற்ற கம்போஸர்களோடு என்னை ஒப்பிட்டு பேசவே முடியாது. காரணம், அவர்கள் எல்லோரும் பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள். உலகில் உள்ள எல்லா கம்போஸர்களுமே அப்பா, அம்மா வழியிலோ அல்லது மாஸ்டர்கள் வைத்தோ கற்றுக்கொண்டிருப்பார்கள். நான் அப்படி இல்லை. எந்தப் பயிற்சியும் பெற்றதில்லை. சாதாரண கிராமத்தில் இருந்து வந்தவன். நான் இசைக்கு எவ்வளவோ பண்ணியிருக்கேன் என்று சொல்வதைவிட, இசை எனக்காக செய்ததை கணக்கிட முடியாது. இசை எனக்காக நிறைய செய்தது என்று சொல்வதைவிட இசை என்னையே உருவாக்கியிருக்கிறது என்பதுதான் உண்மை.
எனக்கு எவ்வளவு இசை தெரியும் என்பதை விட இசைக்கு என்னை தெரிந்திருக்கிறது என்பதுதான் இங்கே முக்கியமாக பார்க்கிறேன். சிவபெருமானை நினைத்து மாணிக்கவாசகர் ‘நமச்சிவாய’ என்ற மந்திரத்தை திருவாசகத்தில் கூறியிருக்கிறார். சிவபெருமான் கொடுத்துதானே இதை மாணிக்க வாசகர் சொல்லியிருக்கிறார்.
ஆகவே, மாணிக்கவாசகர் சொன்ன ‘நமச்சிவாய’ மந்திரத்தை நாம் பாடினாலும் அது சிவபெருமான் சொல்லி பாடுவது என்ற எண்ணத்தில்தான் திருவாசகத்துக்கு இசை வடிவம் கொடுக்கும் மனநிலை வந்தது. கமல்ஹாசன் ஓர் அருமையான கலைஞர். அவர் இசையை அறிந்தவர். ஒரு பாடகரும்கூட. நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் எந்த ஒரு பகுதியையும் அவரால் பாட முடியும். அபாரமான நினைவாற்றலைக் கொண்டவர். அதனால் மட்டும் அவருடன் சேர்ந்து பணியாற்றவில்லை. அவரும் என்னை விரும்பி அவர் படங்களுக்கு தேர்வு செய்கிறார்.
இங்கே இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். நல்லதும் கெட்டதும் அனைத்தும் சேர்ந்தால்தான் வாழ்க்கை முழுமை பெரும். நல்லது மட்டுமே இருந்தால் அது முழுமை அடையாது
இவ்வாறு இளையராஜா பேசினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
28 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago