நயன்தாராவின் 75 வது படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். ஜெய், சத்யராஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ‘ராஜா ராணி’ படத்துக்குப் பிறகு 3 பேரும் இதில் மீண்டும் இணைகின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து இந்தப் படத்தை அதிகமான பட்ஜெட்டில் தயாரிக்கின்றன. தமன் இசை அமைக்கிறார்.
படம்பற்றி நிலேஷ் கிருஷ்ணா கூறியதாவது: குடும்பப் பின்னணியில் உருவாகும் படம் இது. நயன்தாரா மிடில் கிளாஸ் பெண்ணாக நடிக்கிறார். அவரும் ஜெய்யும் ஒன்றாக வேலைப் பார்க்கின்றனர். அவர்களுக்கான காதல் வழக்கமானதாக இல்லாமல் கொஞ்சம் புதிதாக முயற்சி செய்திருக்கிறோம். திருச்சி, சென்னையில் நடக்கும் கதை.
நயன்தாராவுக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கும். படத்துக்கு இரண்டு செட் அமைக்க இருக்கிறோம். ஒரு செட் பிரம்மாண்டமாக இருக்கும். நயன்தாரா கதையின் நாயகியாக நடித்த படத்தை இயக்கியவர்கள் அறிமுக இயக்குநர்கள்தான். இந்தக் கதையை கடந்த 2021ம் ஆண்டு நான் சொன்னதுமே நடிக்க ஒப்புக் கொண்டார். படத்தின் முதல் ஷெட்யூல் 14 நாட்கள் நடந்து முடிந்துவிட்டது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இவ்வாறு நிலேஷ் கிருஷ்ணா கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago