ஜெய் பீம் முதல் அங்கூர் வரை: பா.ரஞ்சித்தின் ‘பிகே ரோசி திரைப்பட விழா’ அட்டவணை

By செய்திப்பிரிவு

இயக்குநர் பா.இரஞ்சித் நடத்தும் ‘பிகே ரோசி திரைப்பட விழா 2023’ சென்னையில் தொடங்கியது. இயக்குர்கள் மாரி செல்வராஜ், தியாகராஜா குமராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை தொடக்கி வைத்தனர்.

சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் பறையிசையுடன் இத்திருவிழா இன்று தொடங்கியுள்ளது. சிறப்பு அழைப்பாளராக தீபா தன்ராஜ், மாரி செல்வராஜ், லெனின் பாரதி, ஷான், தியாகராஜன் குமாரராஜா,துருஷாந் இங்லே உள்ளிட்ட இயக்குநர்கள் பங்குபெற்று சிறப்புரையாற்றினார்கள்.

இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழ், மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியான முக்கியமான திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. குறிப்பாக இன்று (ஏப்ரல் 7) சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கிய ‘ஜெய்பீம்’ திரைப்படம் திரையிடப்படுகிறது. ‘ஜாலிவுட்’ என்ற மராத்தி திரைப்படமும், அனுபவ் சின்ஹாவின் ‘பீட்’ இந்தி திரைப்படமும் இன்று திரையிடப்பட்ட உள்ளது.

இரண்டாம் நாளான நாளை (ஏப்ரல் 8) ‘அங்கூர்’ இந்தி திரைப்படமும், ராஜூவ் ரவியின் மலையாள படமான ‘துறைமுகம்’,ஷான் இயக்கிய ‘பொம்மை நாயகி’ படங்கள் நாளை திரையிடப்பட உள்ளன. திரைப்பட விழாவின் இறுதிநாளன்று (ஏப்ரல் 9) ‘நட்சத்திரம் நகர்கிறது’, ‘விட்னஸ்’ உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE