தமிழில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தவிர்த்தது ஏன் என்ற கேள்விக்கு 'ஸ்பைடர்' பத்திரிகையாளர் சந்திப்பில் மகேஷ்பாபு விளக்கம் அளித்தார்
மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஸ்பைடர்'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தாகூர் மது தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
'ஸ்பைடர்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இச்சந்திப்பில் மகேஷ்பாபு பேசியதாவது:
ஏ.ஆர்.முருகதாஸ் சார் கூறியது போலவே, சில நாட்களில் 'ஸ்பைடர்' வெளியாகவுள்ளது. ஆகையால் இதயதுடிப்பு வழக்கத்தை விட 10 மடங்கு அதிகமாக உள்ளது. தூக்கம் வரவில்லை. முதன்முறையாக ஒரு நேரடி தமிழ்ப்படம் வெளியாகவுள்ளது. அப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவருவது கனவு நனவானது போல உணர்கிறேன். என் வாழ்க்கையில் அவரோடு பணிபுரிந்ததை மறக்கவே முடியாது.
நாயகியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங்கிற்கு நன்றி. சந்தோஷ் சிவன் சாரோடு பணிபுரிய வேண்டும் என்பது என் கனவு. தெலுங்கு இயக்குநர்களோடு எனக்கு ஒத்துவராது என்று கூறி தவிர்த்துவிடுவார். இப்படத்தில் பணிபுரிகிறேன் என்றவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன். எஸ்.ஜே.சூர்யா சாருடைய நடிப்பைப் பார்த்து அனைவருமே ஆச்சரயப்படுவீர்கள். அந்தளவுக்கு எங்கள் படக்குழு நம்பிக்கையோடு இருக்கிறோம். அருமையான பாடல்கள் மற்றும் பின்னணி இசை அளித்த ஹாரிஸ் சாருக்கு நன்றி.
தமிழ்நாட்டில் பெரிய சூப்பர்ஸ்டார்கள் இருக்கிறார்கள், பெரிய படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இரண்டு மொழிகளில் இப்படத்தைச் செய்தால், பெரும் பொருட்செலவிற்கு சரியாக இருக்கும் என்று தொடங்கினோம். மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் சாருடைய படத்துக்கே பெரிய மார்க்கெட் இருக்கிறது.
இனிமேல் இக்கதை தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் வெற்றியடையும் என்று தோன்றினால் தொடர்ச்சியாக தமிழில் நடிப்பேன். சில கதைகள் மட்டுமே இருமொழிகளிலும் வெற்றியடையும். தெலுங்கு திரையுலகிலும் சூப்பர் ஸ்டார், பிரின்ஸ் என்ற பட்டம் வேண்டாம் என்றுதான் சொல்கிறேன். ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கும் போது, பெயரின் மீது அதைப் போட வேண்டாம் என நினைக்கிறேன். உண்மையில் எனக்கு அரசியல் என்ற வார்த்தையை எப்படி எழுத வேண்டும் எனத் தெரியாது.
இவ்வாறு மகேஷ்பாபு பேசினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago