முடிவுக்கு வந்தது சர்ச்சை: ஒரு பக்க கதை படத்துக்கு தணிக்கையில் யு சான்றிதழ்

By ஸ்கிரீனன்

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக தணிக்கை பிரச்சினையிலிருந்த 'ஒரு பக்க கதை' படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஒரு பக்க கதை'. நீண்ட நாட்களாக தயாரிப்பிலிருந்து வரும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தொடங்கப்பட்டு தணிக்கைக்கு விண்ணப்பிக்கப்பட்டது.

அப்படத்தில் மருத்துவரிடம் நாயகி பேசும் போது 'Intercourse' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். இந்த வார்த்தையை நீக்க வேண்டும் என்று தணிக்கைக் குழுவில் தெரிவிக்க, அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்தது. இதனால் சர்ச்சையானது.

'ஒரு பக்க கதை' படக்குழு மறுதணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். அதில் 'Intercourse' வார்த்தைக்கு அனுமதியளித்து 'யு' சான்றிதழ் வழங்கினார்கள். இதனால் படக்குழு மகிழ்ச்சியடைந்துள்ளது. தணிக்கைப் பிரச்சினை முடிவு வந்ததைத் தொடர்ந்து, விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

'ஒரு பக்க கதை' தாமதமாகவே, பாலாஜி தரணிதரன் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் 'சீதக்காதி' என்ற படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

சினிமா

22 mins ago

சினிமா

28 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்