இந்தி சினிமாவில் அறம் குறைவு - காஜல் அகர்வால் தகவல்

By செய்திப்பிரிவு

நடிகை காஜல் அகர்வால் இப்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வரும் அவர், திருமணத்துக்குப் பிறகும் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தென்னிந்திய சினிமாவுக்கு நடிக்க வந்தது ஏன்? என்று தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “இந்தி என் தாய்மொழி. இந்தி திரைப்படங்கள் பார்த்துதான் வளர்தேன். ஆனால்,தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு இந்தி திரையுலகில் குறைவு என்றே கருதுகிறேன். அதனால் இந்தியை விட்டுவிட்டு தென்னிந்திய சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். ஏராளமானவர்கள், தங்கள் திரை வாழ்க்கையை இந்தியில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் நாடு தழுவிய அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறார்கள்.

தென்னிந்திய சினிமா அனைவரையும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. இங்கு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் தனித்துவமான உள்ளடக்கங்களைக் கொண்ட திரைப்படங்கள்வருகின்றன. சிறந்த வேடங்களும் கிடைக்கின்றன. ஆனால், கடின உழைப்புக்கு குறுக்குவழியும் வெற்றிக்கு எளிதான வழியும் ஏதுமில்லை”என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்