விரைவில் நூறு கோடி வானவில்: அடுத்த படத்துக்கு தயாரானார் சசி

By செய்திப்பிரிவு

சொல்லாமலே படம் மூலம் இயக்குநரான சசி, அடுத்து ‘ரோஜாக்கூட்டம்’, ‘ட்ஷ்யூம்’, ‘பூ’, ‘ஐந்து ஐந்து ஐந்து’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படங்களை இயக்கியுள்ளார். இப்போது, ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘நூறு கோடி வானவில்’ படத்தை இயக்கியுள்ளார்.

இதில் சித்தி இத்னானி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த் உட்பட பலர் நடித்துள்ளனர். பாலாஜி காப்பா, அருண் அருணாச்சலம் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டாலும் படம் ரிலீஸ் ஆகவில்லை. இன்னும் இரண்டு மாதங்களில் இதன் ரிலீஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தைத் தயாரித்த அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் படம் இயக்குகிறார் சசி. அதற்கான வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார். ஹீரோ, ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்