சென்னை: நடிகர் ஆர்யா மற்றும் இயக்குநர் முத்தையா கூட்டணியில் உருவாகி வரும் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' திரைப்படத்தின் டீசர் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 31) அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
குட்டிப் புலி, கொம்பன், மருது, கொடிவீரன், தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, விருமன் என தென்தமிழகத்தை கதைக்களமாக கொண்ட படைப்புகளை இயக்கிய உள்ளவர் முத்தையா. இவரது அடுத்த படமாக காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் உருவாகி வருகிறது. இதற்காக ஆர்யாவுடன் முதல் முறையாக அவர் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இத்னானி நாயகியாக நடிக்கிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் டீசர் வரும் 31-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
» Indian Grand Prix 2 - 100, 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை அர்ச்சனா!
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago