அர்ஜுன் ரெட்டி ரீமேக் உரிமையை கைப்பற்றிய இ4 நிறுவனம்

By ஸ்கிரீனன்

'அர்ஜுன் ரெட்டி'படத்தின் தமிழ் மற்றும் மலையாள ரீமேக்/ டப்பிங் உரிமையை கடும் போட்டிக்கும் இடையே இ4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

தெலுங்கு திரையுலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனமும் இப்பட உரிமையைக் கைப்பற்ற பேச்சுவார்த்தை நடத்தியது.

இறுதியாக மலையாளத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான இ4 எண்டர்டெயின்மண்ட் நிறுவனம், தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது. தமிழ் ரீமேக் உரிமையை விற்பனையானதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 'அர்ஜுன் ரெட்டி' திரையிடல் நிறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் தமிழ் மற்றும் மலையாள என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகரை வைத்து இதன் ரீமேக்கைத் தொடங்க முடிவு செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

சந்தீப் வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியான தெலுங்கு படம் 'அர்ஜுன் ரெட்டி'. குறைந்த திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று கிடைத்த வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு உயர்த்தப்பட்டது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்