நடிகர் கார்த்தியின் ‘ஜப்பான்’ திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதேசமயம் இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நலன் குமாரசாமியுடன் கார்த்தி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தியின் திரையுலக பயணத்தில் கடந்தாண்டு சிறப்பாக அமைந்தது. ‘விருமன்’, ‘பொன்னியின் செல்வன் 1’, ‘சர்தார்’ என அவர் நடித்த 3 படங்களுமே ஹிட்டடித்தன. இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது இயக்குநர் ராஜுமுருகனுடன் இணைந்து ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.
கார்த்தியின் 25-ஆவது படமான இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, நாயகனாக வலம் வரும் சுனில், இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தவிர இயக்குநர் விஜய் மில்டன் இப்படத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் 26-வது படத்தை நலன் குமாரசாமி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை காயத்ரி பரத்வாஜ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேமாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
16 mins ago
சினிமா
25 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago