சுசீந்திரன் தயாரிப்பில் தந்தையை இயக்கும் மனோஜ் பாரதிராஜா

By செய்திப்பிரிவு

சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜா நடிப்பில் உருவாகும் படத்தை அவரது மகன் மனோஜ் பாரதிராஜா இயக்குகிறார்.

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க உள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை மார்ச் 31-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த முதல்பார்வையை 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளனர்.

பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

மனோஜ் பாரதிராஜாவை பொறுத்தவரை அவர் மணிரத்னத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்