நெட்டிசன் நோட்ஸ்: துப்பறிவாளன்- மிஷ்கின் மெஸ்மரிசம்

By க.சே.ரமணி பிரபா தேவி

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் 'துப்பறிவாளன்' படம் நேற்று வெளியான நிலையில், படம் குறித்து நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்?

அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Karundhel Rajesh

மிஷ்கின், தனக்குப் பிடித்த நடையை அழகாகக் கையாண்டிருக்கிறார். ஷெர்லக் ஹோம்ஸ் போன்ற ஒரு கதாநாயகன் தமிழில் முதன்முறையாக அறிமுகம். படத்தில் வில்லன்கள் இவர்கள்; ஹீரோக்கள் இவர்கள் என்று முறையாகச் சொல்லிவிட்டு, ஹீரோ வில்லன்களை எப்படி நெருங்குகிறான் என்று எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை.

படத்தின் நீ....ளம் ஒரு உறுத்தல். என்னதான் தெரிந்த கதையாக இருந்தாலும், ஹீரோ ஜெயித்து வில்லன்கள் தோற்கும் கதையாக இருந்தாலும், காட்சிகளை விறுவிறுப்பாக, சுவாரஸ்யமாக அமைத்திருப்பதுதான் மிஷ்கினின் வெற்றி. ஒரு இயக்குநராக, கட்டாயம் இது மிஷ்கினின் நல்ல படங்களில் ஒன்றுதான்.  

துப்பறிவாளனை ஒரு சீரீஸாகவே இனி தொடர முடியும். தொடரவேண்டும் என்றே விரும்புகிறேன். 

Nandhakumar Nagarajan

ரொம்ப எதிர்பார்க்காம போகணும். மிஷ்கினை பிடிக்கிறவங்களுக்கு இந்த படமும் பிடிக்கும். 

Boopathi Krishnan

செகண்ட் ஆஃப்ல நிறைய சொதப்பல்... கடைசி 30 நிமிஷம் ஸ்க்ரீன்பிளே சேத்துல சிக்குன்னு கார் டயர் மாதிரி ஓட ஆரம்பிச்சிருச்சு. கிளைமாக்ஸ்லாம் ப்ரொடியூசருக்காக வச்சமாதிரி இருந்துச்சு...  

Raghav Gopalakrishnan

என்னதான் மிஷ்கின் மேல நம்பிக்கை இருந்தாலும், இது டிபிக்கல் விஷால் படம் மாதிரி ஆயிடுமோனு லைட்டா ஒரு பயம் இருந்துது.. படம் பார்த்து இது மிஷ்கின் படம் தான்னு கன்ஃபர்ம் பண்ணிட்டேன்..! 

Kathiravan Kannan

மேக்கிங்கில் எப்போதும் போல் மிஷ்கின் அழகாய் தெரிகிறார். விஷால் அந்த கேரக்டருடன் சுத்தமாக பொருந்தவில்லை. இடைவேளைக்குப் பிறகு வில்லனை ஹீரோ நெருங்கும் காட்சிகள் சுத்தமாக ஒர்க் ஆகவில்லை. விஷாலைத் தவிர படத்தில் எந்த கேரக்டருக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லை.  

கே. என். சிவராமன்

படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் நிதானமாக பாருங்கள். மிஷ்கின் பெரும் காதலன் என்பது புரியும். சரி படம் எப்படி? மோசமில்லை. ஆஹா ஓஹோவும் இல்லை. தானொரு சிறந்த டெக்னீஷியன்; ஆனால், மோசமான ரைட்டர் என்பதை மீண்டும் மிஷ்கின் நிரூபித்திருக்கிறார். 

மிஷ்கின் துப்பு துலக்கி சினிமா ரைட்டரை கண்டறிந்தால் அவரது திரைக்காதல் பூரணமடைந்து உச்சத்தை தொடும். இல்லையெனில் ஒரு தலைக் காதலாக வெறும் கையோடு அல்லாடும். 

Suresh Eav

ஆங்கிலப்படங்களில் அடித்து துவைத்துப் போட்ட அதே துப்பறியும் கதைகள்தான் என்றாலும் அதிலிருக்கும் புதுப்புது ட்விஸ்ட்கள்தான் படங்களின் வெற்றி. முதன் முதலாக தமிழ் சட்டை போட்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது. 

மிகச் சிறந்த நுண்ணறிவு கொண்ட துப்பறிவாளன் கணியன் பூங்குன்றன், பணத்தை விட தன் மனதிற்கு பிடித்தால்தான் அந்தக் கேஸை ஒத்துக்கொள்வான். அது போன்று ஒரு நாய் கொலையை கண்டுபிடிக்க உள்ளே நுழையும் விஷாலுக்கு கிணறு வெட்ட பூதம் தோன்றியதைப் போல சென்னையில் நடக்கும் அனைத்து பெரிய கொலைகளிலும் ஒரு குரூப் இருப்பத்தை கண்டறிகிறார். அவர்களை எவ்வாறு பிடித்தார் என்பதே மீதிக் கதை . 

விஷால் அழகாகப் பொருந்தியிருக்கிறார். இருந்தாலும் மிஷ்கின் ரெகுலர் டெம்பிளேட் ஹீரோக்களை போலவே இந்த கேரக்டரையும் வடிவமைத்திருப்பது கொஞ்சம் எரிச்சல். பிரசன்னா, பாக்யராஜ் பாவம். ஆங்காங்கே வரும் காமெடி, ஒரு சில ஆங்கிள்கள், வசனங்கள் அருமை. ஆனாலும் துப்பறிவாளன் இன்னும் சுவாராஸ்யமாக துப்பறிந்திருக்கலாம். 

Pichaikaaran Sgl

சினிமா என்பது நாடகமோ, வீடியோ கேமோ ,கிராஃபிக்சோ, பாடல்களோ அல்ல என அழகாக பாடம் எடுத்துள்ளார் மிஷ்கின்.. 

Meenachi Sundaram

நத்தையின் ஓட்டுக்குள் இருக்கும் மெல்லிய சவ்வுப் படலமாய் துப்பறிவாளன் கதைக்குள் இருக்கிறது அற்புதமான ஒரு ஜீவகாருண்யம்.

அரொல் கரொலியின் பின்னணி இசையில் இருந்துதான் கதை ஆரம்பிக்கிறது. திரையில் காட்சிகள் விரியாத, அந்த பத்து நிமிடத்தில் நமக்குள் எழும் காட்சிப் பிம்பத்தையும், கதையின் பின்புலத்தையும் இசை தன் மொழியால் அழுத்தமாக நமக்குள் பதிவு செய்வதை மறுக்கமுடியாது. வெறும் சப்தங்கள்தானே என்று அந்நிமிடத்தை கடந்து விட முடியாது. திரைக்கதையின் ஆழத்திற்கு இணையான அந்நிமிட இசைக்கோர்ப்பு அற்புதம். வாழ்த்துகள் அரொல் கரொலி.  

திரைக்கதை மிக மெதுவாக நகர்ந்தாலும் இயக்குநருக்கே உரித்தான அழுத்தமான பதிவுகள் அதிகம். இந்தப் படம் நம்மை பாதிப்பது கடினம்தான். புரிதலுக்குத் தயாரானால் படத்தை ஓஹோ என்று கொண்டாடுவோம். 

Shalini

ஷெர்லாக் ஹோம்ஸ் ஸ்டைல் படம்தான் எனப் போகிற போக்கில் சொல்லிவிட்டு போய்விட முடியாது. அடுத்து என்ன என்னும் பக் பக் நிமிடங்கள் இருந்தால்தான் அது டிடெக்டிவ் படம். கொஞ்சம்கூட குறைச்சலே இல்லாத சீட் நுனி காட்சிகள். ஒரு காட்சியைக்கூட தேமே எனக் கடத்தாமல் என்னய்யா சொல்றீங்க என ஹார்ட் பீட் எகிற வைத்த மிஷ்கினுக்கு சபாஷ். 

அடடே! விஷாலா என்னும் அளவுக்கு அப்படி ஒரு புதுவித ஆக்டிங், புதுமையான கேரக்டர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்புக்காக கைதட்டல் வாங்கியிருக்கிறார். எப்போதுமான மிஷ்கின் நாயகி அனு மனதில் தனி இடம் பிடிக்கிறார். 

மனதை அள்ளுகிறது கார்த்திக் வெங்கட்ராமின் ஒளிப்பதிவு. முக்கியமாக டிடெக்டிவ் விஷால் வீடு என்னய்யா கலர் டோன் அது. புத்தகம், பெரிய நாற்காலி என மயக்கம் ஏற்படுத்துகிறது. 

Marimuthu Aswinsurya

சின்ன சின்ன நேசிப்புகளும், காதல்களும், போராட்டங்களும் எல்லார் வாழ்விலும் உள்ளது என சொல்லாமல் சொல்லும் திரைக்கதை. வழக்கத்திற்கு மாறாக நம்ப முடியாத சண்டைக்காட்சிகளைத் தவிர மற்றவை ஓகே. 

பாக்யராஜின் இறுதிக்காட்சியும், கதாநாயகியின் இறுதிக்காட்சியும் உருக்கமாக இருக்கிறது. மார்க்கெட் சரிந்த விஷாலுக்கு இது கொஞ்சம் வாழ்வளித்திருக்கிறது. பிரசன்னாவைப் பற்றி ஒரு வரி எழுதாவிட்டால் விமர்சனம் நேர்மையாக இருக்காது. சூப்பர் பிரசன்னா. 

Elangkathir Kuppusamy

முகமூடி படம் ரிலீஸாகும்போது பேட்மேன், சூப்பர்மேன், அயர்ன் மேன் ரேஞ்சுக்கு பில்டப் குடுத்தாங்க...

#துப்பறிவாளன் படத்துக்கு ஷெர்லாக் ஹோம்ஸ் பட ரேஞ்சுக்கு பில்டப் தந்திட்டு இருக்காங்க...பார்ப்போம் ஷெர்லாக் ஹோம்ஸ் மாதிரியா இல்லை சீனாதானா 001 மாதிரியான்னு... 

தண்டா யுதபாணி

#துப்பறிவாளன் மிஷ்கினின் கூர்மையான கதையில் விஷால் நடித்த தரமான படம். ஆனால் திரைக்கதையில் இன்னும் பரபரப்பு இருந்திருக்கலாம். இயல்பையும் மீறி ஒரு சில இடங்களில் செயற்கைத்தன்மை தெரிகிறது. 

Kaaran

ஆரம்பத்தில் மெதுவாக நகரும் காட்சியமைப்புகள்.. பஞ்ச் வசனங்கள் இல்லாமை.. காதல் என்ற பெயரில் பெண்களை வக்கிரமாக காட்சிப்படுத்தாமை... அசட்டு நகைச்சுவை இல்லாதது ஆகியவற்றால் பலருக்கு படம் பிடிபடவில்லை.. தியேட்டரில் கேலி கிண்டல் நிறைந்துகொண்டிருந்தது. ஆனால் போகப்போக படம் அவர்களைக் கட்டிப்போட்டு விட்டது. வேறு ஆப்ஷன்கள் இல்லாததால்தான் மக்கள் குப்பைகளை ரசிக்கின்றனர் என்பதே உண்மை.. துப்பறிவாளன் கண்டிப்பாக ஒரு ஆரோக்கியமான டிரண்ட் செட்டர். 

Gurubaai @ItsGurubaai

துப்பறிவாளன் ஒரு அசத்தலான க்ரைம் நாவல் படிக்கும் அனுபவத்தைக் கொடுத்தது. மிஷ்கினின் திரைமொழி, க்ரைம் ஜானரில் வூடு கட்டி அடிக்கும் லாவகம், படத்தினூடே இழையும் மனிதம் என இந்தப்படத்தில் எல்லாமே கொஞ்சம் கம்மிதான். ஆனால் இருக்கும் எல்லாமே அசத்தலாகவே இருக்கின்றன.  

விஷாலின் நடிப்பு மட்டும் உறுத்திக்கொண்டே இருந்தது. சில இடங்களில் அட போட வைத்தாலும் முக்கியமாக பட்டையைக் கிளப்ப வேண்டிய இடங்களில் எல்லாம் தேமே என நகர்கிறார்.  

படத்தை மொக்கை ரேஞ்சுக்கெல்லாம் பில்டப் செய்யத் தேவையில்லை. மிஷ்கின் தரைமட்டமான மொக்கைப் படங்கள் எடுத்தாலும் அதை ரசித்துப் பார்க்கும்படி எடுப்பார். அதில் அசத்தலான திரைமொழி இருக்கும். அழகியல் இருக்கும். மனிதம் இருக்கும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

சினிமா

36 mins ago

சினிமா

42 mins ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

மேலும்