சென்னை: வரும் 29-ம் தேதி ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அண்மையில் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அக நக’ பாடல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் மணிரத்னம் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான், லால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் நடித்துள்ளது.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டது. இரண்டு பாகங்களாக படம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்தச் சூழலில் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
முதல் பாகம் சுமார் 500 கோடி ரூபாயை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளதாக தகவல். முதல் பாகத்தை காட்டிலும் கூடுதலாக இரண்டாம் பாகம் வசூலில் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
» “நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன்” - எம்.பி பதவி பறிக்கப்பட்ட ராகுல் காந்தி
» “ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தது பாஜகவின் கோழைத்தன செயல்” - ஜவாஹிருல்லா
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago