“பம்மல் கே சம்பந்தம் படத்தைப்போல ஜாலியான படமாக ‘காசே தான் கடவுளடா’ படம் இருக்கும்” என படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்.
ஆர். கண்ணன் இயக்கி தயாரித்து இருக்கும் படம் 'காசேதான் கடவுளடா'. 'மிர்ச்சி' சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சிவா, “கண்ணன் எனக்கு நீண்ட வருடமாகவே பழக்கம். லாக்டவுன் சமயத்தில் என்னை அழைத்து இந்த முறை படம் செய்தே ஆக வேண்டும் என்று சொன்னார். பெரிய படங்கள் எடுத்து அதை ரீமேக் செய்யும் பொழுது கண்டிப்பாக ஒப்பீடு இருக்கும் என்று தெரியும். அந்த பயத்தோடு தான் நாங்கள் இதனை எடுத்தோம். அந்தப் படத்தை விட சிறப்பாக யாராலும் எடுக்க முடியாது. இருந்தாலும், எங்களால் முடிந்த அளவிற்கு நன்றாக கொடுத்திருக்கிறோம். யோகி பாபு , கருணாகரன் என இந்தப் படத்தில் நடித்த எங்கள் எல்லாருக்குமே இந்த டைட்டில் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. தயாரிப்பாளராக அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இயக்குநராக கண்ணன் அவரது பணியை இனிமேல் சிறப்பாக செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க" என்றார்.
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கண்ணன் பேசியதாவது, “கடந்த மாதம் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' வெளியானது. இந்த மாதம் 'காசேதான் கடவுளடா' திரைப்படம் வெளியாக இருக்கிறது. சினிமா இன்று இருக்கக்கூடிய சூழலில் மாதம் ஒரு படம் வெளியிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கு எனக்கு பலருடைய ஆதரவு இருந்தது. அவர்கள் அனைவருக்கும் நன்றி! மிர்ச்சி சிவா இந்த படத்தின் ஹீரோ. அவர் இல்லாமல் இந்த படம் இல்லை. அவரால்தான் இந்த படம் தொடங்கப்பட்டது. நீண்ட கால நண்பர். இப்போதுதான் இருவரும் படம் இணைந்து வேலை செய்ய சூழ்நிலை அமைந்தது. 'உள்ளத்தை அள்ளித்தா', 'பம்மல் கே சம்மந்தம்' படம் போல, இந்தப் படம் ஜாலியான ஒன்றாக இருக்கும். படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உடன்நின்ற அனைவருக்கும் நன்றி" என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
30 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago