சுதந்திரம் பெற்றது தெரியாத கிராமத்தின் கதை!

By செய்திப்பிரிவு

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், ‘1947 ஆகஸ்ட் 16’. அவரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பொன் குமார் இயக்கி இருக்கிறார். கவுதம் கார்த்திக், ரேவதி சர்மா, புகழ் உட்பட பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ஏப்.7ம் தேதி வெளியாகிறது. ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். படம்பற்றி பொன்குமார் கூறியதாவது:

இந்தியா சுதந்திரம் அடைந்தது ஆகஸ்ட் 15. அதற்கு முன் மற்றும் அதற்கடுத்த நாள் தென்காசி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் என்ன நடந்தது என்பதை கற்பனையாகச் சொல்லும் படம் இது. நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த விஷயம் உடனடியாகச் சென்று சேராத ஒரு கடைகோடி கிராமத்தில் என்ன நடந்தது என்பதைச் சொல்லி இருக்கிறோம். இந்தக் கதையை கேட்டதும் ஏ.ஆர்.முருகதாஸ் தானே தயாரிக்க முன்வந்தார். கவுதம் கார்த்திக் ‘ரங்கூன்’ படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்தக் கதைக்கு அவர் பொருத்தமாக இருந்ததால், அவரை நடிக்க வைத்தோம். நாயகியாக ரேவதி சர்மா நடித்திருக்கிறார். புகழ், இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் அவருடைய ஸ்பெஷலான தலைமுடியை வெட்டி, சுதந்திரத்துக்கு முந்தைய இளைஞராகக் குணசித்திர வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். சில காட்சிகளில் கலங்க வைத்திருக்கிறார். பீரியட் படம் என்பதால் அதிக உழைப்புத் தேவைப்பட்டது. இவ்வாறு பொன் குமார் கூறினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்