“நான் பழையாறை வந்ததும் நாம் ‘வைப்’ ஆக ஒரு பாடல்” - கார்த்தி, த்ரிஷா உரையாடல் ட்வீட்

By செய்திப்பிரிவு

“என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி” என பொன்னின் செல்வன் பட கதாபாத்திரங்களாக மாறி கார்த்தியும், த்ரிஷாவும் ட்விட்டரில் நடத்திய உரையாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படம் வெளியாக இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் படக்குழுவினர் விளம்பர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டரில் கார்த்தியும் த்ரிஷாவும் நடத்திய உரையாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இளையபிராட்டி… hi’ என பதிவிட்டிருந்தார். தொடர்ந்து பதில் வராத நிலையில், ‘என்ன பதிலே இல்லை’ என குறிப்பிட்டிருந்தார். அதற்கு த்ரிஷா, ‘என்ன வாணர்குல இளவரசே?’ என கேட்க, ‘தங்கள் தரிசனம் கிடைக்குமா ?’ என கார்த்தி கூறியிருந்தார். தொடர்ந்து த்ரிஷா, ‘ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்’ என பதிலளித்திருந்தார்.

‘கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ?’ என கார்த்தி கேட்க, ‘வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா ?’ என்ற த்ரிஷாவின் பதிலுக்கு, ‘ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்” என்றார். இறுதியாக த்ரிஷா, ‘வீரரே பாடல் எப்போதோ ready மாலை 6 மணி வரை காத்திருங்கள்” என்ற இருவரின் உரையாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்