“கிடைத்ததை இழப்பதற்கும்...” - ‘ஏகே 62’ அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆன நிலையில் விக்னேஷ் சிவன் பதிவு

By செய்திப்பிரிவு

அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்ற அறிவிப்பு வெளியாகி ஓராண்டு கடந்த நிலையில், விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமாரின் அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என கடந்தாண்டு இதே நாளில் லைகா நிறுவனம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களால் ‘ஏகே 62’விலிருந்து விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால், அஜித்தின் அடுத்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ‘ஏகே 62’ படத்துக்கான அறிவிப்பு வெளியாகி இன்றுடன் ஓராண்டு கடந்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் இயக்கிய ‘நானும் ரௌடிதான்’ படத்தில் இடம்பெற்ற பாடலை ஸ்டோரியாக வைத்துள்ளார். அதில் “கிடைச்சத இழக்குறதும், இழந்தது கிடைக்கிறதும் அதுக்கு பழகுறதும் நியாயம் தானடி. கொடுத்தத எடுக்குறதும், வேற ஒண்ணு கொடுக்குறதும் நடந்த மறக்குறதும் வழக்கம் தானடி” பாடல் வரிகளை பதிவிட்டு, “சில வரிகள் ஆழமான அரத்தங்களை கொண்டிருக்கின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

மேலும்