புதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு - வைரலாகும் புகைப்படம்

By செய்திப்பிரிவு

சென்னைக்குத் திரும்பியுள்ள நடிகர் சிம்புவின் புது லுக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பத்து தல’ திரைப்படம் வரும் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் (மார்ச் 18) சென்னையில் பிரமாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில், தாய்லாந்தில் இருந்து சென்னை திரும்பி இருக்கிறார் சிம்பு.

நீண்ட நாட்களாகவே ‘பத்துதல’ படத்தின் தோற்றத்தில் சிம்பு வலம் வந்து கொண்டிருந்தார். இதனால், இந்தப் படத்திற்கு அடுத்து சிம்புவை புதிய தோற்றத்தில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில், தற்போது சென்னை திரும்பியுள்ள சிம்புவின் நீண்ட தலைமுடியுடன் கூடிய புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னையில் நடக்கும் ‘பத்து தல’ படத்தின் பிரமாண்டமான இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்