ஆஸ்கர் விருது வென்றுள்ள ‘நாட்டு நாட்டு’ மற்றும் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ ஆவண குறும்படத்தை இயக்கிய படக்குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய ஆசிய பாடல் என்ற பெருமையை ‘நாட்டு நாட்டு’ பாடல் பெற்று புது வரலாற்றை உருவாக்கியுள்ளது. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, சந்திரபோஸ், ராகுல் சிப்ளிகஞ்ச் & கால பைரவா உள்ளிட்ட படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
மேலும் ‘தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்’ படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஸ்டாலின், “ஆஸ்கர் விருது வென்றுள்ள கார்த்திகி கொன்சால்வ்ஸ், குனித் மோங்கோ இருவருக்கும் எனது வாழ்த்துகள். இந்திய தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு முதன்முறையாக இரண்டு பெண்கள் ஆஸ்கர் விருதை வென்றுள்ளனர் என்ற செய்தியை விட இந்த நாளை எதுவும் அழகாக்கிவிட முடியாது. #TheElephantWhisperers இன் பொறுமையான உருவாக்கம் மற்றும் அதன் கதை விருதுக்கும் பாராட்டுக்கும் தகுதியானது” என்று தெரிவித்துள்ளார்.
» ஆஸ்கர் விருது வென்றது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல்
» ஆஸ்கர் விருதை வென்றது இந்தியாவின் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago